டிஜிட்டல் கவுண்டர்
இந்த புரோகிராமில் 'count ' என்ற வேரியபிலை டிக்கலார் செய்துகொள்ளவும் அதன் மதிப்பு 0 என்று பதிவுசெய்வும் .void setupயில் நாம் cc3200 லான்ச் பேடில் பயன்படுத்தபோகும் இன்புட் மற்றும் அவுட்புட் பின்களை டிக்கலார் செய்யவேண்டும். நாம் இந்த புரோகிராமில் பயன்படுத்தபோகும் Led பின்கள் (29)சிவப்பு,(10)பச்சை மற்றும் (9) (மஞ்சள்) முதலியவற்றை டிக்கலார் செய்துகொள்ளவும் .எல்லா ledகளையும் ஆரம்பநிலையில் OFF ஸ்டேட்டில் டிக்கலார் செய்துகொள்ளவும்.நாம் சீரியல் மானிட்டிரை தகவல்களை பதிவுசெய்ய பயன்படுத்துவதால் serial.begin(115200) என பிரின்ட்செய்யவும்.இதில் 115200 என்பது cc3200 லான்ச் பேடின் பாட் ரேட்.ஒவ்வொரு லான்ச் பேடுக்கும் பாட் ரேட் வேறுபடும் எனவே சீரியல் மானிட்டிரை பயன்படுத்தும்போது பாட் ரேட் மதிப்பை பதிவுசெய்வதில் கவனம் தேவை.
Void loopயில் IR sensorரின் அளவீடுகளை அனலாக் பின் முலம் இன்புட்டாக எடுத்துக்கொள்ளலாம்.ஏனெனில் sensorகளக் சக்னல்களை பதிவுசெய்யும் திறன்பெற்றது.நாம் பயன்படுத்தும் cc3200 லான்ச் பேடில் 2,4,23,24 மற்றும் 33 ஆகியவை அனலாக் திறன்பெற்றது.இவற்றில் நான் 2nd பின்னை IR sensorரின் அளவீடுகளை பயன்படுத்தி கொள்கிறேன். IR sensor ஏதேனும் இடையூறுகளை டிடெக்ட்செய்தால் அதன் மதிப்பு < 2800.எந்தவித இடையூறையும் டிடெக்ட்செய்யாத சமயத்தில் அதன் மதிப்பு 4500. எனவே"If"statement பயன்படுத்திஅதில் sensor value<2800 என்ற கண்டிஷனை டிக்கலார் செய்யவும்.
இந்த கண்டிஷன் உண்மைையானால் சிவப்பு led ON ஸ்டேட்டில் மற்றும் பஸ்ஸரை கூடுதலாக இணைக்க பஸ்ஸரின் பாஸிட்டிவை லான்ச் பேடின் பாஸிட்டிவுடன் மற்றும் நெகட்டிவை லான்ச் பேடின் கரவுன்டுடன் இணைக்க வேண்டும்.இதுமட்டுமின்றி நாம் இந்த கண்டிஷன் உண்மையாகினால் வேரியபிலின் மதிப்பு ஒரு மடங்கு அதிகரிக்க வேண்டும் எனவே ' count++' என்று டிக்கலார் செய்யவும்.இதில் '++' என்பது இன்கிரிமன்ட் ஆப்பரேட்டர் இதன் பொருள் 'count=count+1' என்பதாகும்.அடுத்ததாக "no of persons entered=",count என்று சீரியல் பிரிண்ட் கம்மாண்டில் டிக்கலார் செய்யவும்.இதன் மூலம் நாம் IR sensorரை கடந்து செல்கின்றவரின் எண்ணிகையை அறிந்து கொள்ளலாம்.
ஆர்டுவேர் டிஸ்கிரிப்ஷன்:
நாம் செய்த புரோகிராமை லான்ச் பேடில் அப்லோடுசெய்ய லான்ச் பேடில் SOP பகுதியில் உள்ள பின் 2 மற்றும் tck பின்னையும் இணைக்க வேண்டும்.IR சென்சாரின் அவுட்புட் பின்னை லான்ச் பேடின் பின் P58 (பின்.எண் 2)யோடு இணைக்க வேண்டும்.பஸ்ஸரின் பாஸிட்டிவை பின் P58யில் இணைக்கவும் மற்றும் நெகட்டிவை லான்ச் பேடின் கரவுன்டுடன் இணைக்கவேண்டும்.